tamilnadu

img

50 லட்சம் முஸ்லிம் ஊடுருவல்காரர்கள் நாட்டில் இருந்து விரட்டியடிக்கப்படுவார்கள்- மேற்கு வங்க பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு

50 லட்சம் முஸ்லிம் ஊடுருவல்காரர்கள், நாட்டில் இருந்து விரட்டியடிக்கப்படுவார்கள் என்று மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் ஆகியோர் பல போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநில முதல்வர்கள் இந்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்றும் அறிவித்துள்ளார். இந்நிலையில், மேற்கு வங்கத்தில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய அம்மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ், 50 லட்சம் முஸ்லிம் ஊடுருவல்காரர்கள், நாட்டில் இருந்து விரட்டியடிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும், முதல் கட்டமாக வாக்காளர் அடையாள அட்டையில் இருந்த அவர்கள் பெயர் நீக்கப்படும் என்றும் தெரிவித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

முன்னதாக, ”உத்தரப் பிரதேசம், அசாம் மற்றும் கர்நாடக அரசுகள் பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கக்கூடிய தேசவிரோதிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது சரியான நடவடிக்கை". ”பொதுச் சொத்துகளை சேதப்படுத்துவோருக்கு, துப்பாக்கி குண்டுகள்தான் பரிசாக அளிக்க வேண்டும்”. ”பொதுச் சொத்துகளுக்கு, சேதம் விளைவிப்போர் அடையாளம் காணப்பட்டு, சுட்டுக் கொல்லப்பட வேண்டும் அல்லது வெடிகுண்டு வீசி அழிக்கப்பட வேண்டும்.” இவ்வாறு சர்ச்சைக்குரிய பல கருத்துகளை அவர் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

;